பிரித்தானியாவில் உச்சகட்ட கொரோனா கட்டுப்பாடு? பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

Report Print Basu in பிரித்தானியா
547Shares

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, நாட்டில் உச்சகட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது அலை முதல் விட ஆபத்தானது என்ற அச்சம் எழுந்ததாலும், மே மாதம் முதல் இல்லாத அளவிற்கு நாட்டில் மிக அதிகமான தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கையை பதிவானதை அடுத்து பிரதமருக்கு கட்டுப்பாடுகளை கடுமைாயக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 61,000-ஐ எட்டியுள்ள நிலையில், பிரித்தானியா பிரதமர் அலுவலகம் அரசாங்க விஞ்ஞானிகள் வழங்கிய திட்டத்தை மறுக்கவில்லை.

அதாவது குளிர்காலம் முழுவதும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்றும், வசந்த காலத்தை விட அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அரசாங்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு (SAGE) பகிர்ந்த பகுப்பாய்வின் படி, மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வலன்ஸ் உள்ளிட்ட நிபுணர்களிடமிருந்து தீவிரமான பரப்புரைக்கு வழிவகுத்ததாக தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் பெரிய அளவிலான அறிவியல் மற்றும் மருத்துவ நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும், சமீபத்திய புள்ளிவிவரங்கள் கவலையளிப்பதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்