பிரித்தானியாவின் பிரபல ஷாப்பிங் சென்டரில் உள்ள கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக கிங்ஸ்டனில் உள்ள பெண்டால் ஷாப்பிங் சென்டரில் உள்ள ஜான் லூயிஸ் கடையிலிருந்து கடைக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
காலை 10 மணிக்கு முன்னதாகவே மக்கள் கூட்டம் நிறைந்த ஷாப்பிங் சென்டரில் உள்ள ஜான் லூயிஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அக்டோபர் 28 புதன்கிழமை காலை 9.47 மணியளவில், கிங்ஸ்டனின் வூட் ஸ்ட்ரீட்டில் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் வந்தது.
கடையிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் மற்றும் முன்னெச்சரிக்கையாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை சம்பவயிடத்திற்கு விரைந்தது, காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அதிகாரிகள் ஷப்பிங் சென்டரில் சோதனை மேற்கொண்ட போது கிங்ஸ்டன் பிரிட்ஜ் உட்பட பல பகுதிகளை மூடின.
பொலிசார் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகிறார்கள், இந்த சம்பவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என நம்புவதாக என பொலிசார் தெரிவித்துள்ளனர்.