லண்டன் மக்களுக்கு அரசு போக்குவரத்து முக்கிய அறிவிப்பு: மீறினால் 6,400 பவுண்ட் வரை அபராதம்!

Report Print Santhan in பிரித்தானியா
1227Shares

லண்டன் மக்களுக்கான அரசு போக்குவரத்து தாங்கள் பயணம் செய்யும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில், கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

அதுமட்டுமின்றி இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் இது அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டன் மக்களுக்கான அரசு போக்கு, பொது போக்குவரத்து இடங்களிலும், இரயில் நிலையங்களிலும், டாக்சிகள்ம் அற்றும் தனியார் வாடகை வாகனங்கள் என எதில் சென்றாலும், நீங்கள் முழு நேர பயணங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அப்படி முக்கவசம் அணியாமல் இருந்தால், பயணம் மறுக்கப்படுவதுடன், குறைந்தபட்ச அபராதமாக 200 பவுண்ட்டும், இப்படி ஒவ்வொரு முறையும் முகக்கவசம் அணியாமல் சிக்கினால் அது இரட்டிப்பாகி 6,400 பவுண்ட் வரை விதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

இது வயது, உடல் நல பிரச்சனை மற்றும் இயலாமை போன்றவர்களுக்கு பொருந்தாது.

முகக் கவசம் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

நீங்கள் முகக்கவசம் அணியும் போது, சரியாக உங்களின் வாய் மற்றும் மூக்கு இரண்டையும் சரியாக மறைக்க வேண்டும், டாக்சிகள் மற்றும் தனியார் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைத்து பயணங்களின் காலத்திற்கும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்

முகக்கவசம் அணிவதற்கு விலக்கு இருந்தாலோ, அதற்கான காரணம் இருந்தாலோ, அதற்கான உரிய அனுமதி சீட்டை காண்பிக்க வேண்டும், அதிகாரிகள் யாரேனும் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டால், அதை காட்டலாம், இதற்கு அரசு தளத்தில் சில வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதை பயன்படுத்தியும் கூட இந்த விலக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்