கொரோனா பாதிப்பால் பிரித்தானியாவில் முக்கிய நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு! அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்

Report Print Karthi in பிரித்தானியா
417Shares

ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது வேலையின்மை பிரச்னையும் மேலெழுந்துள்ளது.

பிரித்தானியாவில் 1,734 முதலாளிகள் 20க்கும் அதிகமான பதவிகளை மொத்தமாக நீக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அளவிலான வேலை இழப்புகளை 2006-க்கு பிறகு பிரித்தானியா தற்போது சந்திக்கின்றது.

கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலை ஏற்பட்டதால் செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

இதனையொட்டி லாயிட்ஸ் வங்கி, ஷெல், விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் பிரீமியர் இன் உரிமையாளர் விட்பிரெட் உள்ளிட்ட பல பெரிய வணிகங்களும் ஊழியர்களைக் குறைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன.

செப்டம்பர் மாதத்தில், ஊழியர்களின் செலவினங்களில் அதிக விகிதத்தை முதலாளிகள் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், இந்த திட்டம் அக்டோபர் 31 ஆம் தேதி முழுமையாக முடிவடையும்.

Image credit: BBC

செப்டம்பர் 24 அன்று ரிஷி சுனக், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வேலைகளை ஆதரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டார், ஒக்டோபர் தொடக்கத்தில் அவர் புதிய உள்ளூர் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வணிகங்களில் வேலைவாய்ப்பை ஆதரிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்