பிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
726Shares

பிரித்தானியாவில் 24 வயது இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக 14 வயது பள்ளி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 9 மணியளவில் Three Bridges ரயில் நிலையம் அருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர்.

அங்கே 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் தெருவில் விழுந்து கிடந்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து கொலையாளியைத் தேடும் முயற்சியில் பொலிசார் இறங்கினர்.

நேற்று இரவே அந்த இளைஞரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் Crawleyயைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவரை கைது செய்துள்ளதாக சசெக்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரும் அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், குற்றவாளிக்கு உதவியதாக லண்டனைச் சேர்ந்த 21 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட இளைஞரின் நண்பர் ஒருவர், இது குடும்பத்தகராறாக இருக்கும் போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்