லண்டனில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 65 வயது இந்திய கோடீஸ்வரர்! மணப்பெண் வயது என்ன தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
6249Shares

இந்தியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரும், மூத்த வழக்கறிஞருமான ஹரிஸ் சால்வ் தனது 65 வயதில் லண்டனில் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

ஹரீஸ் சால்வ் (65) என்ற நபர் மூத்த வழக்கறிஞராவார், இவரின் சொத்து மதிப்பு ரூ 200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹரீஸ் கடந்த 2013ஆம் ஆண்டு லண்டனில் Blackstone Chambersக்கு அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 38 காலமாக தன்னுடன் வாழ்ந்த மனைவி மீனாட்சியை இந்தாண்டு ஜூன் மாதம் ஹரீஸ் விவாகரத்து செய்தார்.

இதையடுத்து Caroline Brossard (56) என்ற பெண்ணை லண்டனில் உள்ள தேவாலயத்தில் ஹரீஸ் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணத்தில் 15 விருந்தினர்கள் மட்டுமே லண்டன் விதிப்படி கலந்து கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரீஸும், Carolineம் ஓராண்டுக்கு முன்னர் முதன் முதலில் சந்தித்து கொண்ட நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்