பிரான்ஸ், ஜேர்மனியை பின்பற்றினால் அழிவு தான்! பிரித்தானியா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு விதித்தால் ஏற்கனவே கொரோனாவின் தாக்கத்தால் பெரும் நஷ்டத்தில் போராடி வரும் எஞ்சியுள்ள கடைகள் மற்றும் வணிகங்கள் அழியக்கூடும் என உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளை போல் இரண்டாவது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் வணிகங்களை மூடுவதை பிரித்தானியா அரசாங்கம் பின்பற்ற வேண்டாம் என்று வணிக உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளன.

மேலும், கடைகள் மற்றும் வளாகத்தை கொரோனா பாதுகாப்பானதாக்குவதற்கும், வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் இப்போது நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளன என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய புள்ளிவிவரங்கள் கொரோனா நெருக்கடியால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள சேதங்களின் அளவை வெளிப்படுத்தியதை அடுத்து உரிமையாளர்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெருக்கடி காரணமாக நாட்டில் மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் சில்லறை கூட்டமைப்பு (பி.ஆர்.சி) மற்றும் உள்ளூர் தரவு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

அமைச்சர்கள் கிறிஸ்துமஸின் போது முக்கிய கடைகளை மூடுவதன் மூலம் சரிவிலிருந்து மீண்டு வரும் சில்லறை வியபாரத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடாது என பி.ஆர்.சி.யின் தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்