விரைவில் முடக்கப்படவிருக்கும் லண்டன்... போதாது என நாட்டையே முடக்க வற்புறுத்தும் மருத்துவ ஆலோசகர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
949Shares

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் லண்டன் மூன்றாம் அடுக்கு கொரோனா ஊரடங்குக்குள் செல்லலாம் என செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த மூன்றடுக்கு ஊரடங்கு எல்லாம் வேலைக்கு ஆகாது, மொத்த நாட்டையும் முடக்கவேண்டும் என மருத்துவ ஆலோசகர்கள் பிரதமரை வற்புறுத்தி வருகிறார்கள்.

அத்துடன், அரசு உடனடியாக ஏதாவது கடுமையான நடவடிக்கை எடுத்தாலொழிய கிறிஸ்துமஸ் நேரத்தில் நாடு முழுவதுமே மூன்றாவது அடுக்கு கொரோனா ஊரடங்குக்குள் செல்ல நேரிடுமோ என்ற அச்சமும், தூரத்து உறவினர்களை சந்திக்க இயலாமல் போய் விடுமோ என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மக்கள் அப்படி நினைக்க, இந்த பக்கம், அப்படி கிறிஸ்துமஸ் நேரத்தில் குடும்பத்தினரை சந்திக்க மக்களை அனுமதிப்பது ஒரு சூப்பர் ஸ்பிரடர், அதாவது பயங்கரமாக கொரோனா பரவலை ஏற்படுத்தும் விடயமாக ஆகிவிடலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதற்கிடையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின்னும் தேசிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மட்டும் அவற்றை விலக்கிக்கொள்வது பயனளிக்கலாம் என்ற கருத்தையும் சில ஆலோசகர்கள் முன்வைத்துள்ளார்கள்.

இந்நிலையில், நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தினர், சுமார் 32.6 மில்லியன் மக்கள், வரும் திங்கட்கிழமையிலிருந்து கடுமையான விதிகளுக்குட்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று வீதம் கணிசமாக குறையாவிட்டால், இரண்டு வாரங்களில் லண்டனும் மூன்றாம் அடுக்கு கொரோனா ஊரடங்கிற்குள் செல்லலாம்.

அத்துடன் ஆக்ஸ்போர்டு, லூட்டன், East Riding of Yorkshire, Kingston Upon Hull, Derbyshire Dales, Derby மற்றும் Staffordshire முதலான 16 இடங்கள், நள்ளிரவிலிருந்து கொரோனா இரண்டாம் அடுக்கு ஊரடங்கிற்குள் செல்ல இருக்கின்றன.

அதாவது, 21.6 மில்லியன் பிரித்தானியர்கள், மற்ற வீடுகளில் உள்ளவர்களுடன் கூடுவதற்கு, அது வீட்டுக்குள்ளானாலும் சரி, மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் காபி ஷாப்களுக்குள்ளானாலும் சரி, தடை விதிக்கப்படும்.

இரண்டாவது கொரோனா அலை உருவானால், அது 85,000 பேர் வரை பலிவாங்கலாம் என மருத்துவ ஆலோசகர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனை எச்சரித்துள்ளதுடன், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் அவருக்கு அழுத்தம் கொடுத்துவருவதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன.

அடுத்த மூன்று மாதங்களுக்கு அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நாளொன்றிற்கு 500 பேருக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகலாம் என பிரதமரின் மருத்துவ ஆலோசகர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்