இங்கிலாந்தில் நான்கு அடுக்கு பூட்டுதலா! என்ன சொல்கிறார் வெளியுறவுத்துறை செயலாளர்?

Report Print Karthi in பிரித்தானியா
278Shares

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்திருக்கக்கூடிய நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் முழு முடக்கம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் முழு முடக்கத்தினை தவிர்க்கலாம் என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய உள்ளூர் பூட்டுதல் அமைப்பு மூன்று அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அடுக்கு மூன்றில் உள்ள மிகக் கடுமையான விதிகள் கூட நோய் பரவுவதைத் தடுக்க போதுமானதாக இல்லை என்ற அச்சங்கள் மேலெழுந்ததைத் தொடர்ந்து இந்த நாடு முழுவதிற்குமான முழு முடக்க கோரிக்கைகள் மேலெழுந்தன. இந்த நிலையில் ராப் நான்கு அடுக்கு பூட்டுதல் முறை குறித்து பேசியுள்ளார்.

இந்த நான்கு அடுக்கு பூட்டுதல் என்பது பள்ளி மற்றும் இதர கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும், பணியிடங்களை முடக்குவதற்கும் வழிவகுக்கும் என்று சொல்லப்படுகின்றது.

இங்கிலாந்து முழுவதும் சுமார் 21 மில்லியன் மக்கள் விரைவில் அடுக்கு இரண்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பார்கள், 11 மில்லியன் பேர் அடுக்கு மூன்றில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் லண்டனில் தொற்று பரவல் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தினால், விரைவில் லண்டனும் மூன்றடுக்கு கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூழல் வளர்ந்து வந்தால் கிறித்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முழு நாடும் மூன்றடுக்கு கட்டுப்பாடுகளுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக நாடு முழுவதும் முழு முடக்க யோசனை என்பது தவிர்க்க இயலாத நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்