மனைவி புதுக்காதலரைத் தேடிக்கொண்டதால் ஆத்திரத்தில் முன்னாள் கணவர் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
722Shares

பிரித்தானியாவில் தன் மனைவி புதுக்காதலனைத் தேடிக்கொண்டதால் ஆத்திரமுற்ற முன்னாள் கணவர், அந்த காதலனை தனது மகள் கண் முன்னாலேயே அடித்து நொறுக்கினார்.

Cardiff என்ற பகுதியில் வாழும் Rebecca Grainger (30) என்ற கர்ப்பிணிப்பெண், தனது மூன்று வயது மகளுடன் வீட்டிலிருக்கும்போது, திடீரென முகமூடி அணிந்த மூன்றுபேர் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அதில் ஒருவரின் கண்களையும் மூக்கையும் வைத்து அது தனது முன்னாள் கணவர் Wayne Hall என்பதை அறிந்துகொண்ட Rebecca, அவர்கள் தன் காதலரான Caie Coppஐ (29) தாக்க வந்துள்ளதை தெரிந்துகொண்டுள்ளார்.

குழந்தை வீட்டிலிருக்கிறது, தயவு செய்து போய்விடுங்கள் என்று கதறியும் கேட்காத அந்த மூவரும், குளித்துக்கொண்டிருந்த Coppஐ கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த Copp நினைவிழந்து சாய்ந்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தை Mya, நடந்த அனைத்தையும் திகிலுடன் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறாள். நல்ல வேலையாக அவளது தாய் அவளை கட்டிலுக்குக் கீழே ஒளித்துவைத்துவிட்டார்.

கைது செய்யப்பட்ட Hall சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவத்தின்போது கர்ப்பிணியாக இருந்த Rebeccaவுக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது.

அவளுக்கு Cleo என்று பெயரிட்டுள்ளனர் அவளது பெற்றோர். Hall சிறையிலடைக்கப்பட்டுவிட்டதால் நிம்மதிப்பெருமூச்சுவிடும் Rebeccaவும் Coppம் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்