பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் நினைதத்தை விட வேகமாக பரவி வருவதால், அதை கட்டுப்படுவத்துவது குறித்து, சில கட்டுப்பாடுகள் பற்றியும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த வாரம் உரையாற்றவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பிரித்தானியாவில், ஆய்வாளர்கள் கணித்ததை விட, அதிவேகமாக பரவி வருகிறது.
இது குறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எச்சரிக்கப்பட்ட நிலையில், அவர் அடுத்த வாரம் உரையாற்றவுள்ளார்.
இதில் போரிஸின் நடவடிக்கை கடுமையாக இருக்கலாம், இது தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த கட்டுப்பாடுகள் விதிகள் எவ்வளவு கடுமையானதாக இருக்கும்? எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.
இருப்பினும் சில ஆங்கில ஊடகங்கள் இது டிசம்பர் 1-ஆம் திகதி வரை நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளன. குறைந்தது இரண்டு வாரங்களாவது நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.
அடுத்த வாரம் பணிநிறுத்தம் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை வட்டாரம் தெரிவித்துள்ளதால், பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.
இரண்டாவது பூட்டுதல் ஏற்படுத்தும் பேரழிவு மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து அரசாங்கம் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரிடம் இந்த குளிர்காலத்தில் இந்த வைரஸ் 85,000 பேரைக் கொல்லும் என்று எச்சரித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினம் வருவதால், பொதுவான கட்டுப்பாடு விதிமுறைகளை பிரதமர் அறிவித்தால், அதை ஏற்றுக் கொள்ள ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் அரசாங்கங்கள் இப்போது தயாராக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.