பிரித்தானியா இளைஞர்கள் தீவிரமயமாக்கலுக்கு ஆளாகின்றனர்: பொலிஸ் முக்கிய எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக தனிமைப்படுத்தல் அதிகமான இளைஞர்களை தீவிரமயமாக்கலுக்கு ஆளாக்குகிறது என பிரித்தானியா பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இந்த மாத தொடக்கத்தில் நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானதாக’ உயர்த்தப்பட்டது.

இந்த மாற்றத்திற்கான அர்த்தம் இப்போது பிரித்தானியாவில் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகிறது.

ஜூன் இறுதி வரை கடந்த 18 மாதங்களில், 14 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட பயங்கரவாத குற்றங்கள் தொடர்பாக 17 குழந்தைகள் கைது செய்யப்பட்டனர் என தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைனில் தீவிரவாதத்திற்கு ஆதரவான பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது, மேலும் கொரோனாவால் எளிதல் மூளைச் சலவை செய்யக்கூடியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆன்லைனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்று பிரித்தானியாவின் தீவிரவாத தடுப்பு காவல்துறையின் தேசியத் தலைவர் நீல் பாசு கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்