கொரோனாவால் கோமாவில் வைக்கப்பட்ட கர்ப்பிணி! பல நாட்களுக்கு பிறகு கண்விழித்து.. பிறந்த குழந்தைகள் தனது என நம்ப முடியாமல் திகைத்த தாய்

Report Print Basu in பிரித்தானியா
701Shares

பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமாவில் வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண், பிரசவத்திற்கு பிறகு 16 நாட்களுக்கு பின் கண்விழித்து தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தை நம்ப முடியாமல் சிரமப்பட்டதாக கூறியுள்ளார்.

பர்மிங்காம் சிட்டி மருத்துவமனையில் வாதவியல் ஆலோசகரான Perpetual Uke, மார்ச் மாத இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் ஒரு முக்கியமான பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு, குணமடைய உதவுவதற்காக கோமாவில் வைக்கப்பட்டார்.

அவரது குழந்தைகள், Sochika Palmer மற்றும் Osinachi Pascal, ஏப்ரல் 10 அன்று 26 வாரங்களுக்கு சிசேரியன் மூலம் பிரசவிக்கப்பட்டனர்.

ஆனால் Perpetual Uke பிரசவத்திற்கு பின்னர் மேலும் 16 நாட்கள் கோமாவில் இருந்தார்.

பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு எழுந்திருப்பது நம்பமுடியாதது என்றும், இரட்டையர்கள் தன்னுடைய குழந்தைகள் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறினாலும், அவர் அதை நம்பவில்லை என்றும் நான்கு குழந்தைகளின் தாயான Perpetual Uke கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்