லண்டனில் இரவு நேரத்தில் பெண் ஒருவரின் செயலால் அதிர்ச்சியடைந்த நபர்! நடந்தது என்ன? புகைப்படத்துடன் முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இரயில் நிலையத்தில் ஆண் ஒருவரை தாக்கிவிட்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற பெண் தொடர்பான முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு லண்டனில் உள்ள இரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி நடந்துள்ளது.

இரவு 9.30 மணியளவில் ஆண் ஒருவர் இரயிலை விட்டு இறங்கி ப்ளாட்பார்மில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடந்து வந்த பெண் ஒருவர், அந்த நபரை அடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் தனது உடைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை அவர் வெளியில் எடுத்தார்.

இதனால் அந்த ஆண் அதிர்ச்சியடைந்தார், பின்னர் இருவரும் கீழே புரண்டு சண்டை போட்ட நிலையில் அப்பெண்ணின் கையில் இருந்த கத்தி கீழே விழுந்தது.

இதையடுத்து அங்கிருந்து அந்த நபர் தப்பியோடினார், ஆனாலும் விடாமல் அப்பெண் அவரை துரத்தியுள்ளார்.

ஆனால் எப்படியோ அவர் தப்பியுள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதில் தொடர்புடைய பெண்ணின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர், அவரிடம் விசாரிக்கவும் பொலிசார் விரும்புகின்றனர்.

மேலும் அப்பெண் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருந்தாலோ தங்களிடம் அது குறித்து தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்