பிரித்தானியாவில் அடுத்து மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! கசிந்த முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா
2621Shares

கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளிலிருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகளுக்கு அடுத்து மாதத்திலிருந்து புதிய தனிமைப்படுத்தல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தள்ளது.

பிரித்தானியாவில் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரும் புதிய திட்டத்தின் படி, கொரோனா வைரஸ் தொற்று அதிக விகிதத்தில் உள்ள நாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் குறுகிய காலத்திற்கு தனிமைப்படுத்த அனுமதிக்குமாம்.

பயண தனிமைப்படுத்தல் அடுத்த வாரம் 14 நாட்களில் இருந்து ஐந்து நாட்களுக்கு குறைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை மற்றும் விடுவித்தல் திட்டத்தின் மூலம், கொரோனா இல்லை என சோதனை முடிவைப் பெற்றவுடன் மக்கள் தனிமைப்படுத்தலை நிறுத்தலாம்.

ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளைத் தரும் விரைவான சோதனைகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விமானத் தொழிலுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்