லண்டனில் இந்தியருக்கு சிறை தண்டனை! நேர்மையற்ற தன்மையுடன் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதால் நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா
640Shares

லண்டனில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இந்தியர் நேர்மையற்ற தன்மையுடன் நடந்து கொண்டதற்காகவும், வரி அதிகாரிகளிடம் தவறான ஆவணங்களை காட்டி ஏமாற்றியதற்காவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Vijay Madhaparia என்ற நபர் வடமேற்கு லண்டனில் லட்சுமி டெவலப்மெண்ட் லிமிடட் என்ற நிறுவனத்தை கடந்த 2010ல் தொடங்கினார்.

இந்த நிலையில் 124,000 பவுண்டுகள் வரியை சரியாக செலுத்தாமல் இருந்ததால் லட்சுமி டெவலப்மெண்ட் லிமிடட் நிறுவனம் கட்டாய கலைப்புக்கு கடந்த 2015ல் உட்படுத்தப்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும், Madhaparia தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டதோடு, நிறுவனத்தின் பதிவுகளை தாக்கல் செய்யத் தவறியிருக்கிறார்.

இந்த நிலையில் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக மீண்டும் திறக்க தனது தகுதிநீக்கத்தை மீறி நிறுவனத்தின் கணக்குகளை சமர்ப்பித்தார் Madhaparia.

ஆனால் அந்த கணக்குகள் ஒழுங்குபடுத்தப்பட்ட கணக்காளர்களால் தணிக்கை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகளிடம் பொய் கூறியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் Madhaparia மீது வழக்குப்பதியப்பட்டது.

இந்த வழக்கானது லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் Madhapariaக்கு 27 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட நிறுவனங்களை அவர் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்