கொரோனா எப்போது வரை நீடிக்கும்? ட்ரம்பின் தோல்வியை முன்கூட்டியே கணித்த லண்டன் ஜோதிடர் பரபரப்பு தகவல்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியரான மனோவியல் ஜோதிடரும், எதிர்காலத்தில் நடப்பவற்றை முன்கூட்டியே கணிப்பவரும், மனோவியல் சிகிச்சை நிபுணருமான ஒருவர், கொரோனா தொற்று 2022 வரை நீடிக்கும் என கணித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த Nicolas Aujula (35), சில அபூர்வ சக்திகள் கொண்டவர். குறிப்பாக எதிர்காலத்தில் நடக்க இருப்பவை குறித்து முன் கூட்டியே கணிக்கக்கூடியவர் அவர்.

அவர் கணித்தவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடயவை பல என்றாலும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைவார் என்பதை முன்கூட்டியே கணித்துள்ளாராம் Nicolas.

தனது கடந்த காலம் குறித்து தனக்கு தெரியும் என்று கூறும் Nicolas, தான் கடந்த காலத்தில் ஒரு பிறவியில், எகிப்து ராணி ஒருவராகவும், மற்றொரு பிறவியில், பிரெஞ்சுப் புரட்சியின்போது ஒரு ஆசிரியராகவும், ஒரு சிங்கமாகவும் பிறந்ததாக கூறுகிறார்.

தான் உலகம் முழுவதும் மாமிசம் அல்லது கால்நடைகளுடன் தொடர்புடைய ஒரு பேரழிவைக் கண்டதாக கூறுகிறார் Nicolas.

கொரோனா சீனாவின் மாமிச சந்தையிலிருந்து உருவானதாக ஒரு கருத்து நிலவுவது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

2010க்கு முன்பே, மருத்துவமனை ஒன்று தீப்பற்றி எரிந்ததை தான் ஒரு தரிசனத்தில் கண்டதாக கூறும் Nicolas, அது கொரோனாவால் மருத்துவமனைகள் திக்குமுக்காடுவதைக் காட்டுவதாக இருக்கலாம் என கருதுகிறார்.

உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என கணித்த Nicolas, அது Black Lives Matter movement தொடர்பானதாக இருக்கலாம் என்றும், அந்த போராட்டங்கள் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் வரை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

image: PA Real Life

அத்துடன், நல்ல வாழ்வைத் தேடி பல நாட்டு மக்கள், கூட்டம் கூட்டமாக வேறொரு நாட்டை நோக்கி செல்வதையும் தான் கண்டதாக தெரிவிக்கிறார் Nicholas.

பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி ராஜினாமா, நியூயார்க்கில் ஒரு தீ விபத்து மற்றும் மூன்று பிரபலங்களின் மரணம் என வரிசையாக அடுக்கிக்கொண்டே செல்லும் Nicholas, சில மிக பயங்கரமான தரிசனங்களைக் கண்டதாக கூறுகிறார்.

உலகத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்படுதல், உலக மாநாடு ஒன்றில் பாலியல் தொடர்பான ஊழல் ஒன்று, எரிமலை வெடிப்பு என தொடர்ந்து பல கெட்ட விடயங்கள் நடக்கும் என கணித்துள்ளார் Nicholas.

You May Like This Video

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்