திடீரென கோடீஸ்வரியாகி சொகுசாக வாழ்ந்த பெண்! அவருக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது? வெளிவந்த அதிர்ச்சி உண்மை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து பணத்தை கையாடல் செய்து கோடீஸ்வரியாக மாறிய பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Verwood-ஐ சேர்ந்தவர் Emma Rhodes (37). இவர் தனியார் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வருவாய் தணிக்கையாளராக பணியாற்றி வந்தார்.

நிறுவனத்தில் நிதி தொடர்பான அனைத்து விடயங்களையும் Emma தான் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த Emma திடீரென செல்வந்தராக மாற தொடங்கினார். அதன்படி சொகுசு வீடு, பிரம்மாண்ட கார் மற்றும் விலையுயர்ந்த நகைகளை அவர் வாங்கினார்.

மேலும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லவும் ஆரம்பித்ததோடு, அதிகளவிலான ரொக்க பணத்தை வங்கியில் முதலீடு செய்தார்.

இது குறித்து அவரிடம் சிலர் கேட்ட போது தனது போனஸ் மூலம் பணம் கிடைத்ததாக பொய் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக Emmaவின் பணி பறிபோனது. அப்போது தான் Emma செய்த மோசடிகள் அனைத்தும் அம்பலமானது.

அதன்படி தான் பணிபுரிந்த நிறுவனத்தின் பணமான £437,431.68-ஐ அவர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து Emma மீது தரப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Emma மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்