பிரித்தானியாவில் பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர போரிஸ் முடிவு? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வரும் டிசம்பர் 2-ஆம் திகதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக் கொள்ள போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஐரோப்பாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவ துவங்கிவிட்டது. இதன் காரணமாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.

இருப்பினும், பிரித்தானியாவில், கடந்த மார்ச் மாதத்தில் தீவிரமாக பரவிய தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

தற்போது 2-வது அலை பரவத்தொடங்கியதால், பிரித்தானியர் பிரதமர் போரிஸ் ஜோன்சன், மீண்டும் பொதுமுடக்கம் அமுல்படுத்தினார்.

இந்த பொதுமுடக்கம், கடந்த 5-ஆம் திகதி முதல் டிசம்பர் 2-ஆம் திகதி வரை இருக்கும் எனவும் உத்தரவிட்டார்.

தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து டிசம்பர் 2-ஆம் திகதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதேநேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை போரிஸ் ஜோன்சன் விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்