லண்டனில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 15 வயது மாணவியை வழிமறித்த 3 இளைஞர்கள்! பின்னர் நடந்த எதிர்பாராத சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 15 வயது மாணவியிடம் மூவர் தவறாக நடந்து கொள்ள முயன்ற போது அங்கு வந்த ஒருவர் மாணவியை காப்பாற்றியுள்ளார்.

வடக்கு லண்டனை சேர்ந்த 15 வயது மாணவி பள்ளிக்கூடம் முடிந்து வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலை ஓரத்தில் மூன்று இளைஞர்கள் புகைப்பிடித்து கொண்டிருந்தனர்.

பின்னர் மாணவி அருகில் வந்த மூவரும் அவரை பிடித்து இழுத்து உடையை கழட்ட முயன்றனர். அப்போது எதிர்பாராத வகையில் அந்த வழியாக நபர் ஒருவர் வந்தார், அவரை பார்த்த மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து மாணவியை பாதுகாப்பாக அழைத்து சென்ற அவர் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது, பொலிசார் கூறுகையில், மாணவிக்கு உதவிய நபரிடம் சம்பவம் தொடர்பில் பேச விரும்புகிறோம்.

ஏனெனில் அந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து அவரிடம் விசாரித்தால் நிறைய தகவல் கிடைக்கலாம்.

மாணவியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் கருப்பினத்தவர்கள் ஆவார்கள்.

இந்த சம்பவத்தில் நல்லவேளையாக மாணவியை ஒருவர் காப்பாற்றியுள்ளார். யாருக்கேனும் இது தொடர்பில் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்