பிரித்தானியாவில் அடுத்த மாதம் 2-ஆம் திகதி முதல் இவை எல்லாம் மீண்டும் திறக்கப்படலாம்! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அடுத்த மாதம் ஜிம், சிகையலங்கார தேவைகள் மற்றும் அழகுகலை நிலையங்கள் போன்றவை திறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் தீவிரமாகியது. அதன் பின் ஜுன் மாதத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், நாட்டில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதையடுத்து தற்போது நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவத் துவங்கியுள்ளதால், மீண்டும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது.

ஆனால், கிறிஸ்துமஸ் வரவிருப்பதாலும், நாட்டில் இப்போது ஓரளவிற்கு கொரோனா கட்டுக்குள் இருப்பதாலும், சில விஷயங்களில் தளர்வுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

அதற்கு ஏற்ற வகையில், வரும் 2-ஆம் திகதி முதல் பொது முடக்கத்தை அரசு முடித்து கொள்ள முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், தற்போது அமைச்சர்களின் தொடர் அழுத்தங்கள் காரணமாக ஜிம்கள், சிகையலங்கார தேவைகள் மற்றும் அழகு நிலையங்கள் போன்றவை மீண்டும் திறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் வரும் 2-ஆம் திகதி நிச்சயமாக பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்