போதும், எனக்கு அந்த சிகிச்சை அளியுங்கள்: 22 சிறார்களை சீரழித்த பிரித்தானியர் கெஞ்சல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் 22 சிறார்களை சீரழித்து, தற்போது தனிமைச் சிறையில் இருக்கும் நபர், தமக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 34 வயது ஆரோன் கோலிஸ் என்பவர், சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, கடந்த 2009 முதல் சிறையில் உள்ளார்.

2009-ல் குழந்தை ஒன்றுக்கு இனிப்பு வழங்கி, துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதுடன், அதை காணொளியாகவும் பதிவு செய்துள்ளார் கோலிஸ்.

இந்த வழக்கில் சிக்கிய அவர், பின்னர் மொத்தம் 22 சிறார்களை துஸ்பிரயோகம் செய்துள்ளது விசாரணையில் அம்பலமானது.

தொடர்ந்து உளவியர் தொடர்பான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, தனிமைச் சிறையில் உள்ளார் கோலிஸ்.

ஆனால் தற்போது, தம்மை ஆண்மை நீக்கம் செய்யும் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் எனவும்,

அது மட்டுமே தமக்கு சிறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படும் ஒரே வழி என முன்னாள் நர்சரி ஊழியரான கோலிஸ் நம்புகிறார்.

விவாதத்துக்குரிய அந்த ஆண்மை நீக்கம் செய்யும் சிகிச்சைக்கு சுமார் 20,000 பவுண்டுகள் செலவாகும் என கூறப்படுகிறது.

இதுவரை பிணை அனுமதிக்கப்படாத நிலையில், சமீபத்தில் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை தனிமைச் சிறையில் இருந்து பொதுச் சிறைக்கு மாற்றவும், பிணை வழங்கவும் மறுத்துள்ளது.

இதனையடுத்தே, தமக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கோலிஸ் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

ஆனால் ஆண்மை நீக்கம் செய்வதால், உரிய பலன் கிடைக்குமா என்பதில் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

2014-ல் முதன் முறையாக அதிகாரிகளிடம் கோலிஸ் தமக்கு ஆண்மை நீக்கம் செய்வது தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த சிகிச்சையால் மட்டுமே தாம் இனி வெளியுலகை காண முடியும் எனவும், அதன் பின்னர் கண்டிப்பாக பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் தம்மால் ஈடுபட முடியாது எனவும் கோலிஸ் நம்புகிறார்.

மட்டுமின்றி, சிறையில் அளிக்கப்படும் சிகிச்சையால் தமக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும், அதனால் உளவியல் ரீதியாக எந்த மாறுதலும் ஏற்படப்போவதில்லை என்கிறார் கோலிஸ்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்