சக அதிகாரியின் மனைவியுடன் மோசமான செயலில் ஈடுபட திட்டமிட்ட பொலிசார்: எதிர்பாராமல் வகையாக சிக்கவைத்த கமெரா

Report Print Balamanuvelan in பிரித்தானியா
634Shares

பெண் பொலிசார் ஒருவருடன் தவறான உறவுவைத்துக்கொள்ள பொலிசார் ஒருவர் திட்டமிட, அந்த செய்தியை அவரது வீட்டு வாசலிலிருந்த கமெரா அவரது கணவருக்கே தெரியப்படுத்திய சம்பவம் பிரித்தானியாவில் அரங்கேறியுள்ளது.

சர்ரே காவல் நிலையம் ஒன்றில் தலைமை கான்ஸ்டபிளாக இருக்கும் Nev Kemp (48), Rachael Johnson (38) என்ற பெண் பொலிசாருடன் ஹொட்டல் ஒன்றில் ரூம் போட திட்டமிட்டுள்ளார்.

தனது திட்டத்தை Rachaelக்கு தொலைபேசியில் Kemp தெரிவிக்க, எதிர்பாராத விதமாக அந்த அழைப்பு அவரது வீட்டு வாசலிலிருந்த கமெரா மூலமாக Rachaelஇன் கணவரான Ross Johnson (40)க்கு சென்று சேர்ந்துள்ளது.

அந்த உரையாடலை நேரலையில் கேட்க நேர்ந்த பொலிசாரான Ross Johnson, தன் மனைவியை அழைத்து விசாரிக்க, தனக்கும் Kempக்கும் தவறான உறவு இருப்பது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார் Rachael.

கடுப்பான Ross Johnson இது குறித்துபுகாரளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்