மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் அவதிக்குள்ளாக நேரிடும்: இனி வரும் மாதங்கள் கடுமையானவை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கொரோனா தடுப்பூசி தொடர்பில் நம்பிக்கையான தகவல்கள் வெளி வந்திருந்தாலும், மார்ச் மாதம் வரை பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இல்லத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பின் போது, ஈஸ்டர் பண்டிக்கைக்கு பின்னரே தற்போதைய சூழ்நிலையில் இருந்து ஒரு மாறுதலுக்கான வாய்ப்பு தெரிவதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னர் நாட்டில் உள்ள மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் மக்கள் கொரோனா தடுப்பூசியை பெறுவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் மாதங்கள் மிகவும் கடுமையாக இருக்கப்போகிறது என எச்சரித்துள்ள பிரதமர்,

குளிர் காலம் வரவிருப்பதால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு சோதனைக் காலமாக அமையும் என்றார்.

மட்டுமின்றி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படும் அடுக்குமுறை கட்டுப்பாடுகளால் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் அவதிக்கு உள்ளாவது உறுதி என கூறப்படுகிறது.

புதிதாக அடுக்குமுறை செயல்பாட்டை அமுலுக்கு கொண்டு வருவதால், டிசம்பர் 2 முதல் தேசிய ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு, பதிலாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் அடுக்குமுறை நடவடிக்கைகள் அமுலுக்கு வரும் என்றார்.

மேலும், புதிய அடுக்குமுறை 2 விதிகளின் கீழ் உள்ள பகுதிகளில், உணவின் ஒரு பகுதியாக விருந்தோம்பல் முறைகளில் மட்டுமே மது வழங்கப்படலாம்.

அடுக்கு 3-ல், உணவகங்களில் இருந்து உணவை வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஆனால், மதுபான விடுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த இரவு 10 மணி வரையான கட்டுப்பாடுகளில் ஒரு மணி நேர தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்