கொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி: உண்மையில் பல செய்திகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1297Shares

கொரோனா தடுப்பூசி தொடர்பில் பிரித்தானியர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்து வருகின்றன.

ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் தயாரிப்பான பைசர் தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு முன்பே பிரித்தானியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற செய்தி வெளியானது.

தற்போது பிரித்தானிய தயாரிப்பான ஆக்ஸ்போர்டு மற்றும் AstraZeneca தடுப்பூசியும், 90 சதவிகிதம் செயல் திறன் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முதலில் பாதி டோஸ் தடுப்பு மருந்தும், பின்னர் ஒரு மாதத்திற்குப்பின் முழு டோஸ் தடுப்பு மருந்துமாக கொடுக்கும் பட்சத்தில், அந்த தடுப்பூசி 90 சதவிகிதம் செயல் திறனுடன் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 12,000 பேருக்கு சோதனை முயற்சியாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கொடுக்கப்பட்டபோது மோசமான விளைவுகள் எதையும் அது ஏற்படுத்தவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, பைசர் தடுப்பூசி மிகக்குறைந்த வெப்பநிலையில் மட்டுமே சேமித்துவைக்கப்படவேண்டும் என்று இருக்கும் நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை சாதாரண பிரிட்ஜிலேயே வைக்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேல், விலை... பைசர் தடுப்பூசியின் விலை ஒரு டோசுக்கு 15 பவுண்டுகள் ஆகும், ஆனால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் விலை 2 முதல் 4 பவுண்டுகள்தான் ஆகிறது என வரிசையாக பிரித்தானியர்களுக்கு நல்ல செய்திகள் தொடர்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்