லண்டனில் இரவு நேரத்தில் நடந்த வெட்ககேடான சம்பவம்! பொலிசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி: எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
1280Shares

லண்டனில் இரவு நேரத்தில் திருடர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் மரங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் , Wimbledon இருக்கும் கடை ஒன்றிலே இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 27-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 7.40 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்த கடையின் முதலாளி ஜோஷ் லைல் கூறுகையில், சுமார் 3000 பவுண்ட் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், கொரோனா காரணமாக ஏற்கனவே விற்பனையில் பாதிப்பில் இருக்கும் நிலையில், இது போன்ற சம்பவம் நடந்தது அவருக்கு வேதனையை கொடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கபட்டதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது சுமார் மூன்று பேர் கொண்ட கும்பல், இந்த கிறிஸ்துமஸ் மரங்களை எடுத்துச் செல்வது போன்று உள்ளது. இதனால் பொலிசார் அந்த சிசிடிவி காட்சியை வெளியிட்டு மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் இது போன்ற விழா காலகட்டத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்