லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண்ணை மோசமான வகையில் புகைப்படம் எடுத்த நபர்! சிசிடிவி காட்சியுடன் முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
638Shares

லண்டனில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து சூப்பர் மார்கெட்டுக்கு வந்த நபர் ஒருவர் அவரை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

தென்கிழக்கு லண்டனில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு 22 வயது இளம்பெண்ணொருவர் வந்திருக்கிறார்.

அவர் பொருட்களை எடுத்து கொண்டிருந்த போது திடீரென பின்னாடி திரும்பி பார்த்த போது நபர் ஒருவர் செல்போன் மூலம் தன்னை நைசாக ஆபாசமாக புகைப்படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து வெளியில் சென்றிருக்கிறார்.

பின்னர் அப்பெண் தனது தாயாரை பாதுகாப்புக்காக அங்கு வரவழைத்த நிலையில் பொலிசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பொலிசார் வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில் அப்பெண்ணை கடைக்குள் பின் தொடர்ந்து ஒரு நபர் வந்ததும் நைசாக அவரை மோசமாக புகைப்படம் எடுப்பதும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து இதில் தொடர்புடையவரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

மேலும் அவரிடம் இது தொடர்பில் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்