15 நிமிடங்களுக்கு மேல் செலவிட வேண்டாம்: பிரித்தானியர்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
872Shares

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடைக்கு செல்லும் பிரித்தானியர்கள் கண்டிப்பாக 15 நிமிடங்களுக்கு மேல் அங்கே செலவிட வேண்டாம் என புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியாவில் தேசிய அளவிலான ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு, மூன்றடுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது டிசம்பர் 2 ஆம் திகதி முதல் பிரித்தானியா முழுவதும் அமுலுக்கு கொண்டுவரப்படும். இதில் பாதிப்பு மிக அதிகம் கொண்ட பகுதியை மூன்றாவது அடுக்காக அடையாளப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா பரவல் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிவரும் நிபுணர் குழுவில் ஒருவரான பேராசிரியர் லூசி யார்ட்லி,

பொதுமக்கள் கண்டிப்பாக கடைகளில் மிகக் குறைவான நேரத்தை செலவிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும், அல்லது கண்டிப்பாக கொரோனா பாதிப்பு உறுதி என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 நிமிடங்களுக்கும் குறைவாகவே நாம் ஒரு கடைக்குள் செலவிட வேண்டும் என கூறியுள்ள அவர்,

2 மீற்றர் இடைவெளிக்கும் குறைவான தூரத்தில் ஒருவர் நமக்கு அருகாமையில் இருப்பார் எனில், கொரோனா பரவும் சாத்தியம் மிக அதிக என அவர் எச்சரித்துள்ளார்.

ஒரு கடைக்குள் 15 நிமிடம் கண்டிப்பாக நாம் செலவிட வேண்டிய தேவை இருக்காது, இருப்பினும் குறைவான நேரம் ஒரு கடைக்குள் செலவிடுவது என்பது நம் பாதுகாப்புக்கு அது உத்தரவாதம் என்கிறார் பேராசிரியர் லூசி யார்ட்லி.

மக்கள் கூடும் பகுதியில் இருக்கும்போது நாம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கடைகளில் இருக்கும்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, போரிஸ் அரசின் இந்த அடுக்கு பாதுகாப்பு திட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்