சொந்த பிள்ளைகள் 6 பேரை எரித்துக் கொன்ற பிரித்தானிய தாயார் விடுவிப்பு: பொதுமக்கள் எதிர்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
2778Shares

தீ விபத்தில் தனது ஆறு குழந்தைகளை கொன்ற பிரித்தானிய தாயார் ஒருவர் வெறும் எட்டு ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு தீவிபத்தில் தமது பிள்ளைகள் ஆறு பேரை கொன்ற வழக்கில் 39 வயதான மைரேட் பில்போட் சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்களது குடியிருப்புக்கு நெருப்பு வைத்து சேதப்படுத்தி, அதனால் அரசு சார்பில் இன்னொரு பெரிய குடியிருப்பை பெற திட்டமிட்ட பில்போட்,

சொந்த குடியிருப்புக்கு நெருப்பு வைத்துள்ளார். ஆனால் பெட்ரோல் ஊற்றப்பட்டு நெருப்பு வைக்கப்பட்ட நிலையில்,

தீ மள மளவென பரவியது, இதனால் குடியிருப்புக்குள் சிக்கிய தங்களது பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது பில்போட் தம்பதிக்கு.

இதனையடுத்து அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின்னர், 2013-ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது வெறும் 8 ஆண்டுகளே தண்டனை அனுபவித்துள்ள நிலையில் பில்போட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பில்போட் சிறையில் நீண்ட காலம் தண்டனை அனுபவிப்பார் என்று நம்பியவர்களுக்கு, அவரது சொந்த தாயார் உட்பட, அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளது கோபத்தைத் தூண்டியுள்ளது.

அவளுக்கு கிடைத்த தண்டனை கிட்டத்தட்ட போதுமானதாக இல்லை, அவள் அந்த கொடூரத்தை செய்தபின் நாங்கள் அவளை ஏற்றுக்கொள்வதாக இல்லை எனவும், 62 வயதான வேரா தமது மகள் தொடர்பில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பில்போட் விடுதலை செய்யப்பட்டாலும், அவர் இனிமேல், குழந்தைகள் 6 பேரும் கொல்லப்பட்ட டெர்பி பகுதிக்கு நுழைவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்