பிரித்தானியாவில் மூன்றாவது பொது முடக்கம்? போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
347Shares

பிரித்தானியாவில் உள்ளூர் மட்டத்தில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்காவிட்டால், பிரித்தானியா மூன்றாவது முறையாக முடக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில், வரும் புதன் கிழமையுடன் பொது முடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், உள்ளூர் மட்டத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

அவை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வாக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.

ஏற்கனவே மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.

இந்த கொரோனா மூன்றடுக்கு கட்டுப்பாடுகளால் ஏற்படும் இழப்பை விட அதிக உயிர்கள் காக்கப்படும் என்பதற்கு உறுதியான ஆதாரம் வேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள்.

இந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில் அவர்கள் போரிஸ் ஜான்சனின் மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை நிராகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆகவே, அப்படி அவர்கள் தனது திட்டத்தை நிராகரித்துவிட்டால், நாடு மூன்றாவது பொதுமுடக்கத்திற்குள் செல்வதை தவிர்க்க இயலாது என போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்