லண்டனில் தனியாக நின்ற இளம்பெண் அருகில் வந்து உடைகளை களைந்த இளைஞன்! சிசிடிவி புகைப்படத்துடன் பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
351Shares

லண்டனில் 13 வயது இளம்பெண்ணிடம் சென்று தனது உடைகளை களைந்து அருவருப்பாக செயல்பட்ட நபர் குறித்த முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

லண்டனின் Canary Wharf அருகில் தான் இந்த சம்பவம் கடந்த மே மாதம் 31ஆம் திகதி மாலை 5.15 மணிக்கு நடந்துள்ளது.

அங்கு இருந்த இளம்பெண்ணிடம் சென்ற இளைஞன் ஒருவர் தனது உடைகளை களைந்து நின்றுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து ஓடிய சிறுமி அது தொடர்பில் தாயாரிடம் கூறினார்.

இந்த நிலையில் இதில் தொடர்புடைய நபர் குறித்த சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் இருக்கும் நபரிடம் சம்பவம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என பொலிசார் கூறியுள்ளனர்.

அதே சமயம் இளம்பெண்ணுக்கு அவனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் கூறுகையில், குறித்த நபரின் வயது 20ல் இருந்து 30க்குள் இருக்கும்.

இது இளம் பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு வருத்தமளிக்கும் சம்பவமாகும்.

சிசிடிவி புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனே எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்