நடு வானில் விமான பயணிகளுடன் உல்லாசம்: மர்ம பெண்மணியை தேடும் பிரித்தானிய விமான நிறுவனம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1501Shares

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பறக்கும் விமானத்தில் பயணிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக வெளியான தகவலை அடுத்து, தற்போது அந்த ஊழியர் யார் என கண்டுபிடிக்கும் முனைப்பில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

மேலும், குறித்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.

சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட பெயரில் அடையாளம் காணப்படும் அந்த ஊழியர், பயணிகளுக்கு பறக்கும் விமானத்தில் உடல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்து தரப்படும் என விளம்பரம் செய்து வந்துள்ளார்.

அவரது முகத்தை வெளிக்காட்டாமல், அவர் அளிக்கும் சேவைகள் தொடர்பில் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளின் தேவையை அறிந்து கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பயணிகளிடம் இருந்து அவர் எவ்வளவு கட்டணம் வசூலித்துள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.

மேலும், விமான நிலையத்திற்கு வெளியே, சேவை தேவை எனில் 50 பவுண்டுகள் முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும் அவரது சமூக ஊடக பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக, சேவை தேவைப்படும் நபர், விமான ஊழியர்கள் தங்கும் ஹொட்டலில் அறை முன்பதிவு செய்ய வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விவகாரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தையே உலுக்கியுள்ள நிலையில், தற்போது அந்த ஊழியரை அடையாளம் காணும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

ஆனால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் சிலர், குறிப்பிட்ட அந்த விமான ஊழியர், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்தே பணியாற்றுவதாக கூறுகின்றனர்.

இருப்பினும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகத்தினரால் இதுவரை அந்த ஊழியரை அடையாளம் காணப்படவில்லை.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர்,

எல்லா நேரங்களிலும் எங்கள் சக ஊழியர்களிடமிருந்து நடத்தையின் மிக உயர்ந்த தரத்தை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

மட்டுமின்றி சர்ச்சைக்குரிய அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுகிறார் என்றார்.

இதனிடையே, குறித்த பெண்மணியின் சமூக ஊடக பக்கம் மொத்தமாக நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்