பிரித்தானியாவில் அதிகாலையில் மிக வேகமாக காரை செலுத்திய பெண்: காரை நிறுத்தியதும் திடுக்கிட்ட பொலிசார்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1514Shares

பிரித்தானியாவில் அதிகாலையில் வேகமாக கார் ஒன்று வருவதைக் கண்ட பொலிசார் சந்தேகமடைந்து அந்த காரை நிறுத்தியுள்ளனர்.

North Yorkshire பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், கார் கதவைத் திறந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடவைத்தது.

அந்த காரை செலுத்திவந்தது ஒரு கர்ப்பிணிப்பெண்! நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண், குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதை அறிந்த பொலிசாருக்கு பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

Image: Yorkshire Live

உடனே காரிலிருந்து அவரை இறக்கி, பத்திரமாக அவரை மகப்பேறு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர் அந்த பொலிசார்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட, அவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Image: Getty Images

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்