பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி? யாருக்கு முன்னுரிமை? வெளியான 50 மருத்துவமனைகளின் பட்டியல்

Report Print Santhan in பிரித்தானியா
1595Shares

பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசிக்காக 50 மருத்துவமனைகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் மக்கள் அந்த தடுப்பூசியை பெற காத்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மாட்ன் ஹாக் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக அடுத்த வாரம் முதல் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுவரை 40 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசியை பிரித்தானிய அரசு ஆர்டர் செய்துள்ளது, இந்த தடுப்பூசி திட்டம் அடுத்த திங்கட்கிழமை முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் Matt Hancock, பிரித்தானியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசிக்காக ஏற்கனவே 50 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் இன்னும் சில நாட்களில் இந்த தடுப்பூசியை பெற்றுவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், Simon Stevens, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் மருத்துவமனைகளில் பைசர் தடுப்பூசியைப் பெற முடியும்.

ஜி.பி. அறுவை சிகிச்சைகள் பின்னர் வரும் வாரங்களில் உள்ளூர் தடுப்பூசி மையங்களாக செயல்படத் தொடங்கும், பிரித்தானியா முழுவதும் 1,000 மையங்களுக்கான திட்டங்கள் உள்ளதாக கூறினார்.

தடுப்பூசி மூன்று முறைகளில் இருக்கும் என்றும், நாடு முழுவதும் 50 மருத்துவமனைகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், அதற்கு அனுமதி கிடைத்தவுடன் தடுப்பூசி பெறலாம் என்று Matt Hancock கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, தடுப்பூசி மையங்களும், தடுப்பூசி பெற மக்கள் செல்லக்கூடிய பகுதியும் பெரிய மையங்களாக இருக்கும்.

அவை இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஒன்றை வெளியிடும் உலகின் முதல் நாடு பிரித்தானியா என்று கூறப்படும் நிலையில், அடுத்த வார துவக்கத்தில் இருந்து கொரோனாவுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நாட்டில் தொடங்குவோம்.

முந்தைய அறிவிப்புகளிலிருந்து எங்களுக்குத் தெரிந்தபடி, இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது. எம்.எச்.ஆர்.ஏ(Medicines and Healthcare products Regulatory Agency) இதை மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது என்று அங்கீகரித்துள்ளது. மேலும் எங்களுக்கு ஒரு தடுப்பூசி உள்ளது, எனவே இது மிகவும் நல்ல செய்தி.

வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள சுகாதார அமைச்சர்களுடன் பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி கொரோனாவால் பாதிக்கப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் .

இருப்பினும் இது கொரோனா பரவுவதை=எவ்வளவு தடுக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

இதனால், நிச்சயமாக, நாங்கள் அதை மிகவும் கவனமாக கண்காணிப்போம்.

எனவே, கொரோனாவால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும், அதிக பாதுகாப்பு தேவைப்படும் மக்களைப் பாதுகாப்பதே நோக்கம் என்பதால், அவர்களுக்கு முன்னுரிமை.

இது திட்டத்தின் ஒரு பகுதி தான், ஆலோசகர்கள் வகுக்கும் மருத்துவ முன்னுரிமையின்படியே, செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியின் பெரும்பகுதி ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு போடப்படலாம் என்று என்று Simon Stevens செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.

அதன் படி முதலில் கொரோனா தடுப்பூசி பெறும் 50 மருத்துவமனைகளின் பட்டியலை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

 • Blackpool Teaching Hospitals
 • Brighton and Sussex University Hospitals
 • Cambridge University Hospitals
 • Chesterfield Royal Hospital
 • Countess of Chester Hospital
 • Croydon University Hospital
 • Dartford and Gravesham Hospitals
 • Dorset County Hospitals
 • East and North Hertfordshire Hospitals
 • East Kent Hospitals
 • East Suffolk and North Essex Hospitals
 • Frimley Health NHS Foundation Trust
 • Gloucestershire Hospitals
 • Great Western Hospitals
 • Guys & St Thomas NHS Trust
 • James Paget University Hospitals
 • Kings College Hospital
 • Princess Royal University Hospital, Kings
 • Lancashire Teaching Hospital
 • Leeds Teaching Hospital
 • Leicester Partnership NHS Trust
 • Liverpool University Hospitals
 • Medway NHS Foundation Trust
 • Mid and South Essex Hospitals
 • Milton Keynes University Hospital
 • Norfolk and Norwich University Hospital
 • Northampton General Hospital
 • North Bristol NHS Foundation Trust
 • North West Anglia Foundation Trust
 • Nottingham University Hospitals
 • Oxford Health NHS Foundation Trust
 • Portsmouth Hospital University
 • Royal Cornwall Hospitals
 • Royal Free London NHS Foundation Trust
 • Salford Royal NHS Foundation Trust
 • Sheffield Teaching Hospitals
 • Sherwood Forest Hospitals
 • Shrewsbury and Telford NHS Trust
 • Stockport NHS Foundation Trust
 • St George's University Hospitals
 • The Newcastle Upon Type Hospitals
 • University College Hospitals
 • University Hospitals Birmingham
 • University Hospitals Coventry and Warwickshire
 • University Hospitals Derby Burton
 • University Hospitals of North Midlands
 • University Hospitals Plymouth
 • United Lincolnshire Hospitals
 • Walsall Healthcare
 • West Hertfordshire Hospitals
 • Wirral University Teaching Hospital
 • Worcestershire Acute Hospitals
 • Yeovil District Hospital


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்