பிரித்தானியாவில் திடீரென்று தோன்றிய மர்ம உலோகத்தூண்! எந்த பகுதியில் தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
265Shares

அமெரிக்கா மற்றும் ரொமேனியாவைத் தொடர்ந்து இப்போது பிரித்தானியாவில் ஒரு மர்ம உலோகத்தூண் தோன்றியுள்ளது.

இம்முறை, Isle of Wight என்ற பிரித்தானியத் தீவில் அந்த உலோகத்தூண் தோன்றியுள்ளது. அத்துடன், இப்போது தோன்றியிருக்கும் தூண் அப்படியே கண்ணாடி போல் பிரதிபலிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

அது 8 அடி உயரம் இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். சில பத்திரிகைகள் அது 10 அடி உயரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சிலர், இது போட்டோஷாப் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படும் பொய்யான வேடிக்கை தகவல் என கூறியுள்ள நிலையில், உள்ளூர் புகைப்படக்கலைஞரான Alice Williams என்பவர், தானே நேரில் சென்று அதை பார்த்துவிட்டு புகைப்படங்களும் எடுத்து வெளியிட்டு, அது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன், அமெரிக்காவிலுள்ள உத்தா பாலைவனத்தில் ஒன்று, ரொமேனியா நாட்டில் ஒன்று, மற்றும் அமெரிக்காவின் Pine Mountain என்ற இடத்தில் ஒன்று என மூன்று உலோகத்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அவற்றிற்கு, The Most Famous Artist என்ற பெயர் கொண்ட ஒரு குழுவினர் உரிமை கொண்டாடியதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்