லண்டனில் பொலிசாரின் பகீர் செயல்! இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் சிக்கிய வீடியோ காட்சி

Report Print Santhan in பிரித்தானியா
949Shares

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில்,மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, தலைநகரான டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் உலகின் பல்வேறு நாடுகளின் கவனததை ஈர்த்துள்ளது. இந்தியாவில் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் இருநாடுகளின் உறவும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், கனடா அமைதியான போராட்டத்திற்கு எப்போதும் எங்கள் குரல் இருக்கும் என்று தெரிவித்துவிட்டது.

(Picture: @UB1UB2/Jam Press)

இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப் விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் லண்டன் பொலிசார் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இந்த போராட்டத்தின் போது, பொலிசார் ஒருவர் அங்கிருந்த போராட்டக்காரர் ஒருவரை முகத்தில் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

(Picture: Rex)

மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளர். தொடர்ந்து கோவிட் -19 விதிகளை மீறியதற்காக பலரை பொலிசார் கைது செய்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த 36 எம்.பிக்கள் இந்திய வம்சாவளி எம்.பிக்கள் உள்ளிட்டோர் இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் வசம் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Picture: Rex)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்