100 கிலோ எடையிருந்த இளம்பெண்... காதலன் துரோகம் செய்ததால் எடுத்த முடிவு: இன்று எப்படி இருக்கிறார் பாருங்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
344Shares

அதிக பருமனாக இருந்த ஒரு இளம்பெண், தன் காதலன் தனக்கு துரோகம் செய்வதை தெரிந்துகொண்டதால் மனம் உடைந்துபோனார்.

வேல்ஸைச் சேர்ந்த சுமார் 100 கிலோ எடையுடன் இருந்த Emily Donovan (24), திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நேரத்தில், தன் காதலன் தனக்கு துரோகம் செய்வதை கண்டுபிடித்தார்.

தன் உடல் பருமன், தான் தன்னம்பிக்கை இழக்க காரணமாக இருந்ததை புரிந்துகொண்ட Emily, தன் ஏமாற்றத்தை வேறு பக்கம் திருப்ப முடிவு செய்தார்.

திருமணத்தை நிறுத்திவிட்டு உடற்பயிற்சி மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார் Emily. எப்போதும் காதலனுடனும் நண்பர்களுடன் வெளியே சென்று கண்டதை உண்ணும் பழக்கம் கொண்ட Emily, இப்போது சமைக்கக் கற்றுக்கொண்டு வீட்டிலேயே சமைத்து உண்ண ஆரம்பித்துள்ளார்.

முன்பெல்லாம் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவே மறுக்கும் Emily, இப்போது அழகழகாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்.

முன்பெல்லாம், அவர் என்ன சாப்பிட்டாரோ அதையேதான் நானும் சாப்பிட்டேன், அது எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை என்று கூறும் Emily, இப்போதும் தான் உடல் எடையைக் குறைத்ததைக் குறித்துதான் பேசுகிறாரேயொழிய, முன்னாள் காதலனைக் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்