சிறுவர்களை எளிதில் தொற்றும் புதிய கொரோனா வைரஸ்... பிரித்தானியாவில் பள்ளிகள் திறப்பு எப்போது?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
583Shares

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதுவகை கொரோனா வைரஸ், சிறுவர்களை எளிதில் தொற்றும் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்பு ஜனவரி 11ஆம் திகதி பள்ளிகளை திறக்கும் ஒரு திட்டம் இருந்த நிலையில்தான் இங்கிலாந்தில் இந்த புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது.

அது வேகமாக பரவக்கூடியது, 70 சதவிகிதம் அதிகம் தொற்றக்கூடியது என்ற செய்திகளுடன், அந்த புதிய வகை கொரோனா வைரஸ் சிறுவர்களை எளிதில் தொற்றும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளதால் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமராலோ, உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலாலோ எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற கேள்விக்கு நேரடியான பதிலைக் கூற இயலவில்லை. அது விஞ்ஞானத்தின் கையில்தான் உள்ளது என்கிற ரீதியில் அரசு அதிகாரிகள் பதிலளித்துள்ளார்கள்.

பள்ளிக்குத் திரும்பும் முன், அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் கொரோனா சோதனை செய்யும் திட்டத்தால் கூட ஜனவரியில் பள்ளிகள் திறப்பதை உறுதி செய்ய முடியாது என்கிறார்கள் அதிகாரிகள்.

ஆக, ஜனவரியிலும் பள்ளிகளை திறக்கும் வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. ஒருவேளை அது பிப்ரவரி வரை கூட தள்ளிப்போகலாம்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்