வேல்ஸில் புதிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு... எவ்வளவு மதிப்புள்ள தங்கம் இருக்கலாம் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
11776Shares

சுரங்கம் தோண்டுபவர்கள் வேல்ஸில் புதிய தங்கச்சுரங்கம் ஒன்றைக் கண்டுபிடித்ததைக் கொண்டாடிவருகிறார்கள்.

வேல்ஸிலுள்ள Snowdonia என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும்போது இந்த பெரும் கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியில், 500,000 அவுன்ஸ் தங்கம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தை 1,400 பவுண்டுகளுக்கு விற்றால்கூட, அங்கிருக்கும் மொத்த தங்கத்தின் மதிப்பு 700 மில்லியன் பவுண்டுகள் இருக்கும் என்பதால் சுரங்கம் தோண்டுபவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் பிரித்தானியாவில் கிடைத்த தங்கத்தில், 90 சதவிகிதம் வரை வடக்கு வேல்ஸிலிருந்துதான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்