பிரித்தானியாவில் 4 மற்றும் 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
247Shares

பிரித்தானிாயவில் 4 மற்றும் 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் பெரிய அளவிலான கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

இவர்கள் மட்டுமின்றி 2 அடுக்கிலிருந்த 3 அடுக்கு கட்டுப்பாட்டிற்கு நகரும் அபாயத்தில் உள்ள பகுதிகளின் அதிகாரிகளும் பெரிய அளவிலான சமூக சோதனை முன்னெடுக்க அழைப்பு விடுப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் 17 உள்ளூர் அதிகாரிகள் கொரோனா சோதனை கருவிகளைப் பெற உள்ளனர், மொத்தம் 123 பகுதிகளுக்கு கொரோனா சோதனை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உள்ள 3 பேரில் 1 பேர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை,அவர்கள் நோயைப் பரப்பக்கூடும் என தெரியாது, எனவே நோய்த்தொற்று மற்றும் தொற்றுநோய்களை அடையாளம் காண உதவுவதற்காக பரிசோதனையை விரிவுபடுத்துவது அவசியம் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.

உங்கள் உள்ளூர் பகுதியில் உங்களுக்கு சமூக சோதனை வழங்கப்பட்டால், சோதனை செய்யப்படுவதற்கும் உங்கள் உள்ளூர் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறினார்.

பிரித்தானியாவில் சமூக சோதனைக்கு இன்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் Boston ( 3 அடுக்கு), Calderdale ( 3 அடுக்கு), City of Bristol (2 அடுக்கு), County Durham ( 3 அடுக்கு), Coventry ( 3 அடுக்கு), Gateshead ( 3 அடுக்கு), Hartlepool ( 3 அடுக்கு), Lincoln ( 3 அடுக்கு), Newcastle ( 3 அடுக்கு), North Somerset ( 2 அடுக்கு), North Tyneside ( 3 அடுக்கு), Northumberland ( 3 அடுக்கு), Redcar and Cleveland ( 3 அடுக்கு), South Gloucestershire ( 3 அடுக்கு), South Tyneside ( 3 அடுக்கு), Sunderland ( 3 அடுக்கு), Walsall ( 3 அடுக்கு).

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்