பிரித்தானியாவில் மேலும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன்பு புதிய வகை கொரோனா வைரஸ் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது 70 சதவீதம் வேகமானதும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது, பிரித்தானியாவில் மேலும் புதிய வகை கொரோனா வைரஸ் கொண்ட இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார்.
Matt Hancock reveals a 'highly concerning' new strain of Covid-19 has been found in South Africa pic.twitter.com/yd6Z8DWzp8
— The Sun (@TheSun) December 23, 2020
இதனால் கடந்த இரண்டு வாரங்களில் தென் ஆப்பிரிக்காவில் வந்த அனைத்து பயணிகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆபத்தான விகிதத்தில் பரவுகின்ற ஒரு புதிய தொற்று வைரஸை நாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.