கர்ப்ப சோதனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! ஸ்கேனில் அவர் கண்ட எதிர்பாரத காட்சி: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா
3747Shares

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கருப்பை சோதனையின் போது, வயிற்றின் உள்ளே இருக்கும் குழந்தை தம்ஸ் அப் உயர்த்தி காட்டி, அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கடந்த 9-ஆம் திகதி பிரித்தானியாவின் Lincolnshire-ன் Horncastle-க் இருக்கும் மருத்துவமனைக்கு, 33 வயது மதிக்கத்தக்க Holly Giles என்ற கர்ப்பிணி பெண், தன்னுடைய 20 வார கர்ப்ப பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் பார்த்த காட்சி, அவராலே நம்ப முடியாத அளவில் இருந்துள்ளது. அதில் கருப்பையின் உள்ளே இருக்கும் குழந்தை, கட்டை விரலை உயர்த்தி காட்டுவது போன்று இருந்தது.

(Image: Holly Giles / SWNS)

தன்னுடைய நணபர் இதை புகைப்படம் எடுக்க அனுமதித்ததாக கூறும் அவர், தனது வாழ்க்கையில் இது போன்று பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் தான் இந்த பரிசோதனைக்காக நண்பர் ஒருவரை தன்னுடன் அழைத்து வந்ததாகவும், அப்போது சோதனை செய்த மருத்து ஓ மை காட் என்று சொன்னார். உடனே நாங்கள் திரையைப் பார்த்த போது, அது மிகவும் அரிதானதாக இருந்தது,.

இதற்கு முன்பு அப்படி எதுவும் பார்த்ததில்லை என்று அவர் கூறினார். குழந்தையின் அந்த சைகை எல்லாம் சரியாகிவிடும் என்பது போல் இருந்தது.

(Image: Holly Giles / SWNS)

நான் 16 வயதில் இருந்தபோது என் அம்மாவை இழந்தேன், எனவே இது எப்போதும் ஒரு கடினமான அனுபவமாக இருக்கும்.

ஆனால் அந்த சிறிய சைகை மிகவும் அழகாக இருந்தது.

நான் அவரை அல்லது அவளைப் பார்க்க முற்றிலும் காத்திருக்கிறேன். அவை என் அம்மாவின் பரிசு என்று நான் நினைப்பதாக உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்