பிரித்தானியாவில் புதிதாக 30,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு; தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம்!

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
224Shares

பிரித்தானியாவில் மேலும் 30,501 கொரோனா பாதிப்புகள் ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளன.

நாட்டின் சில பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் தொற்று மேலும் அதிகமாகிவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றன.

கடந்த 28 நாட்களுக்குள் மேலும் 316 பேர் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 70,752 ஆக உயர்ந்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி இங்கிலாந்தின் சில பகுதிகள் தொற்று பாதிப்புகள் குறித்த தரவைப் அளிக்காததால், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

வடக்கு அயர்லாந்து புதிய தொற்று மற்றும் இறப்புகள் குறித்து புகாரளிக்கவில்லை மற்றும் ஸ்காட்லாந்து இறப்புகளைப் பதிவு செய்யவில்லை.

வேல்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 பேர் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளதாகக் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லண்டன் ஆம்புலன்ஸ் சேவை (LAS) ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரத்திற்கு 400-க்கும் மேற்பட்ட அழைப்புகளை கையாண்டு வருவதாகவும், அவசரகாலத்தில் 999-ஐ மட்டுமே அழைக்குமாறு மக்களை வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளது.

பாக்ஸிங் டே அன்று கிட்டத்தட்ட 8,000 அழைப்புகள் வந்த நிலையில், லண்டனில் ஆம்புலன்ஸ்களுக்கான தேவை, இதுநாள் வரை பரபரப்பான சேவை இருந்த நாளாக கருத்தப்பட்ட மார்ச் 16-ஆம் தேதிக்கு இணையாக இருந்தது எனக் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்