பிரித்தானியாவில் இந்த வாரத்தில் 20 லட்சம் மக்களுக்கு இதை செய்ய வேண்டும்! எச்சரிக்கும் லண்டன் ஆராய்ச்சி நிறுவனம்

Report Print Santhan in பிரித்தானியா
421Shares

பிரித்தானியாவில் இந்த வாரத்தில் 20 லட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்த வேண்டும் எண்று லண்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் புதிய வகை கொரோனா வைரஸ் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டன் ஆராய்ச்சி மருத்துவம் நிறுவனம் வெளியிடுள்ள அறிக்கையில், பிரித்தானியாவில் மூன்றாம் கட்ட கொரோனா அலையைத் தவிர்ப்பதற்கு இவ்வாரத்தில் 20 லட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வரும் நாட்களில் கொரோனா பரவலைத் தடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் பல்வேறு தளர்வுகளை பிரித்தானியா அரசு அறிவித்திருந்த நிலையில், புதிய வகை கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தத் தளர்வுகளை ரத்து செய்தது.

இதற்கு முன்புவரை 3-வது படிநிலைக் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் 4-வது படிநிலை ஊரடங்கைக் கடுமையாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அமுல்படுத்தினார்.

புதிய வகை கரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கொரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கான விமானச் சேவையை 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

இதற்கிடையில், புதிய வகை கொரோனா வைரஸுக்கு மாடர்னா, பைசர், ஸ்புட்னிக்-5 ஆகிய தடுப்பு மருந்துகள் பயனளிப்பதாக அதிகாரிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்