பிரித்தானியாவில் ஒன்லைனில் உணவு டெலிவரி செய்வதை ரத்து செய்துள்ளன பல்பொருள் அங்காடிகள்.
பல பகுதிகளில் பலத்த பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டதால், இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு பல்பொருள் அங்காடிகள் ஆளாகியுள்ளன.
பாதுகாப்பு கருதி, சாரதிகள் சாலைகளில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
புத்தாண்டு தினத்திற்கு முன் ஆறு இஞ்ச் அளவுக்கும் அதிகமான பனிப்பொழிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ய இயலாத ஒரு சூழலும், தனிமையான இடங்களில் வாழ்வோருக்கும், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்கும் உணவுப்பொருட்கள் கிடைக்க இயலாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை, பனிப்பொழிவு என பிரித்தானியாவின் பல பகுதிகளில் பாதகமான சூழல் காணப்படுவதால், Manchester, Gloucestershire, Wiltshire மற்றும் Berkshire ஆகிய பகுதிகளில் வாகனங்களில் பயணிப்பதற்கு ஆபத்தான சூழல் காணப்படுகிறது. இதற்கிடையில், தாங்கள் செய்த ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிரித்தானியர்கள் கடும் வெறுப்படைந்துள்ளார்கள்.