நீங்களும் கணிக்கலாம்... கொரோனாவையும் ட்ரம்பின் தோல்வியையும் முன்கூட்டியே கணித்த ஜோதிட வல்லுநர் கூறுவது என்ன?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
261Shares

கொரோனாவையும், ட்ரம்பின் தோல்வியையும் முன்கூட்டியே கணித்த ஜோதிட வல்லுநர் ஒருவர், நீங்களும் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கலாம் என்று கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த Nicolas Aujula (35), இந்த தேர்தலில் ட்ரம்ப் தோற்றுப்போவார் என மிகச்சரியாக கணித்தவர்.

அத்துடன், தான் கொரோனா என்ற கொள்ளை நோய் வரும் என்பதையும் முன்கூட்டியே கணித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நமக்கு இருக்கும் ஆறாவது அறிவை முறையாக பயன்படுத்தினால், யார் வேண்டுமானாலும் எதிர்காலத்தை கணிக்கலாம் என்று கூறியுள்ளார் அவர்.

ஆவிகளை உணர்தல் முதலான அபூர்வ சக்திகளைக் கொண்ட Nicolas, தான் பூர்வஜென்மத்தில் எகிப்திய ராணியாகவும், ஆப்பிரிக்க மந்திரவாதியாகவும் பிறந்ததாக தெரிவித்திருந்தார்.

ஆறாவது அறிவை முறையாக பழக்குவித்தல், தியானம் செய்தல், அடுத்து செல்ல இருக்கும் இடத்தை குறித்து கணிக்க முயற்சி செய்தல், மற்றவர்களின் மனதை அறிய பயிற்சி செய்தல் என சில பயிற்சிகளை தொடர்ந்து செய்தால் யாரும் எதிர்காலத்தை கணிக்கலாம் என்கிறார் Nicolas.

ஆனால், 2021ஆம் ஆண்டைக் குறித்து அவர் எதையாவது கணித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்