ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய மலிவு விலை கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானியா ஒப்புதல்! வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
243Shares

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பிரித்தானியா மருந்து கட்டுப்பாட்டாளர்கள் புதன்கிழமை ஒப்புதல் அளித்தனர்.

பிரித்தானியா மருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்த இரண்டாவது கொரோனா தடுப்பூசி Oxford-AstraZeneca உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட Pfizer-BioNTech தடுப்பூசிக்கு இந்த மாத தொடக்கத்தில் பிரித்தானியா மருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்தனர்.

பிரித்தானியா மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதல் மூலம் Oxford-AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட Oxford-AstraZeneca தடுப்பூசி, Pfizer-BioNTech தடுப்பூசியை விட மலிவானது மற்றும் உற்பத்தி செய்வது எளிதானது என்பதால் தடுப்பூசியின் தயாரிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஜேர்மன் உருவாக்கிய தடுப்பூசி -70 சி-யில் வைத்திருக்க வேண்டும், அதே நேரத்தில் ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பூசி சாதாரண குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம், இது தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதை எளிதாக்குகிறது.

AstraZeneca நிறுவனத்திடமிருந்து 100 மில்லியன் டோஸ்களை பெற இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது நாட்டிலுள்ள 50 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாகும்.

இப்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் தடுப்பூசி தயாரிப்பை துரிதப்படுத்த முடியும் என்று பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.

மேலும், வசந்த காலத்தில் நாம் கொரோனா பிடியிலிருந்து வெளியேற முடியும் என்று நம்பிக்கையுடன் இப்போது சொல்லலாம் என மாட் ஹான்காக் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்