இளவரசர் வில்லியம் வேல்ஸ் இளவரசர் ஆகக்கூடாது... பிரித்தானியாவின் உயரிய விருதை திருப்பிக் கொடுத்த நபர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
524Shares

இளவரசர் வில்லியம் வேல்ஸ் இளவரசராக ஆகக்கூடாது என்பதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்காக, தனக்கு அளிக்கப்பட்ட பிரித்தானியாவின் உயரிய விருதை திருப்பிக்கொடுத்துள்ளார் ஒருவர்.

வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகரும் அரசியல் ஆர்வலருமான Michael Sheen (51), தனக்கு 2009ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாரால் வழங்கப்பட்ட பிரித்தானியாவின் உயரிய விருதான Order of the British Empire என்ற விருதை திரும்பக் கொடுத்துள்ளார்.

இளவரசர் சார்லஸ் மன்னராகும்போது, வேல்ஸ் இளவரசர் என்ற பட்டத்தை இளவரசர் வில்லியமுக்கு கொடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார் அவர்.

அப்படி ராஜ குடும்ப வாரிசுக்கு வேல்ஸ் இளவரசர் என்ற பட்டத்தை கொடுக்கும் பாரம்பரிய செயல் வேல்ஸுக்கு அவமானம் என்று கூறியுள்ளார் அவர்.

மாணவர்களுக்கு விரிவுரையாற்றுவதற்காக வேல்ஸின் வரலாற்றை ஆய்வு செய்த Sheen, எங்கள் நாட்டை, வந்தவர்கள் எல்லாம் மாற்றியிருக்கிறார்கள், எங்கள் மொழி, எங்கள் நம்பிக்கை என எல்லாவற்றையுமே அவர்கள் மாற்றிவிட்டிருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களது ஆதிக்கத்தின் நிழலின் கீழ்தான் வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் என்பது போன்ற விடயங்கள் தனது ஆய்வின்போதுதான் தனக்கு தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.

உதாரணத்திற்கு, என்சைக்ளோபீடியாவில் வேல்ஸ் தொடர்பில் பிரெக்சிட் குறித்து தேடினால், இங்கிலாந்தைப் பார்க்கவும் என்று போடப்பட்டுள்ளது, வேல்ஸுக்கு என்று தனியாக எதுவும் இல்லை, எல்லாம் இங்கிலாந்துதான் என்கிறார் அவர்.

ஆகவே, இது தொடர்பான ஒரு விடயத்தைக் குறித்து மாணவர்கள் முன் விரிவுரையாற்றும்போது, அவர்கள் கொடுத்த விருதை நான் வைத்திருந்தால் நன்றாக இருக்காது என்பதால்தான் அதை திரும்பக் கொடுத்துவிட்டேன் என்கிறார் Sheen.

வேல்ஸ் இளவரசர் என்ற பட்டம், வேல்ஸ் புரட்சியை அடக்குவதற்காக, ஆங்கிலேயர் ஒருவருக்கு மன்னர் முதலாம் எட்வர்டால் கொடுக்கப்பட்டது என்று கூறும் Sheen, அந்த பட்டம் இளவரசர் வில்லியமுக்கு கொடுக்கப்படுவது வேல்ஸுக்கு அவமானம் என்கிறார்.

நான் அதிகம் கேட்கவில்லை, கடந்த காலத்தில் நடந்த தவறுகளை சரி செய்ய இது ஒரு வாய்ப்பு என்கிறார் Sheen.

(நம் வரலாற்றின்படி, நம் நாடுகளைத்தான் அடிமைப்படுத்திவைத்திருந்தார்கள் என்று எண்ணினால், இப்போது வேல்ஸிலிருந்தே ஒரு குரல் உயர்வதைப் பார்த்தால், உலக வரலாற்றில் தெரிந்துகொள்ள நிறைய இருக்கும்போலிருக்கிறது)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்