உயர்மட்ட தளபதி சுலைமானி படுகொலையில் பிரபல பிரித்தானியா நிறுவனத்திற்கு தொடர்பு! எப்படி? ஈரான் பரபரப்பு தகவல்

Report Print Basu in பிரித்தானியா
141Shares

தளபதி குவாசிம் சுலைமானி படுகொலையில் பிரபல பிரித்தானியா பாதுகாப்பு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக ஈரான் வழக்கறிஞர்-ஜெனரல் Ali Al-Qasi Mehr குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனவரி மாதம் அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் ஈரானின் உயர்மட்ட தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதில் இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனமான G4S பங்கு வகித்ததாக ஈரானின் வழக்கறிஞர் ஜெனரல் Ali Al-Qasi Mehr குற்றம் சாட்டியதாக நீதித்துறையின் அதிகாரப்பூர்வ Mizan செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளில் ஒன்று, சுலைமானி படுகொலை செய்யப்பட்டதில் பாக்தாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு வழங்குவதற்கு பொறுப்பேற்றுள்ள பிரித்தானியா நிறுவனமான G4S பங்கு வகித்தது தான் என Ali Al-Qasi Mehr குற்றம்சாட்டியுள்ளார்.

சுலைமானியும் அவரது தோழர்களும் விமான நிலையத்திற்கு வந்தவுடன், G4S நிறுவனத்தின் ஊழியர்கள் பயங்கரவாதிகளுக்கு அவர்கள் பற்றிய தகவல்களை வழங்கினர் என்று Ali Al-Qasi Mehr கூறினார்.

2010 முதல் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான G4S நிறுவனம், இந்த குற்றச்சாட்டை ‘முற்றிலும் ஆதாரமற்ற ஊகம்’ என்று கூறி நிராகரித்துள்ளது.

குவாசிம் சுலைமானி மற்றும் Abu Mahdi al-Muhandis மீதான தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை G4S நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்