புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சட்ட விரோதமாக கூடினால்... பிரித்தானிய பொலிசார் கடும் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
219Shares

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சட்ட விரோதமாக கூடினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என பிரித்தானிய பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனில் புத்தாண்டை முன்னிட்டு தெருக்களில் பார்ட்டி கொண்டாடுவோர் மட்டுமின்றி பொதுமுடக்கத்தை எதிர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் கூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த கோடையில் கிழக்கு லண்டனில் 'Good Vibez rave' என்ற பெயரில் கூடிய கூட்டத்தைப்போல, இம்முறையும் கூடி பெரிய ஆட்டமும் பாட்டுமாக பார்ட்டி நடத்த, சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட முறையில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

'Good Riddance 2020 NYE Special' என்ற பெயரில் ஒரு கூட்டம், ரகசியமாக ஆளுக்கு 30 பவுண்டுகள் கட்டணத்தில் டிக்கெட்களை விற்று வருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Brightonஇலும், பொது முடக்க எதிர்ப்பாளர்கள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

லண்டன் மேயர் Sadiq Khan, மக்கள் அமைதியாக தங்கள் வீடுகளில் புத்தாண்டைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மீறி பார்ட்டிகளில் ஈடுபடும்போது கூட்டத்தை கலைக்க இருப்பதாகவும், பார்ட்டி நடத்துபவர்களுக்கு 10,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்க இருப்பதாகவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்